Friday, March 30, 2012
Wednesday, March 21, 2012
தீயிட்டுக் கொளுத்தப்பட்ட கேணல் ரமேஸ்! புதிய ஆதாரம் அம்பலம்!!
விடுதலைப் புலிகளின் முன்னாள் கிழக்கு மாகாணத் தளபதி கேணல் ரமேஸ் படுகொலையின் மேலும் பல புதிய ஆதாரம் வெளியாகியுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் கிழக்குப் பிராந்தியத் தளபதி விசாரணையின் பின் இராணுவத்தினரால் காட்டுமிராண்டித்தனமாகப் படுகொலை செய்யப்பட்டு பின் தீயிட்டுக் கொளுத்தப்பட்டதற்கான புகைப்பட ஆதாரங்கள் தற்போது வெளிவந்துள்ளது.
கேணல் ரமேஷ் இலங்கை இராணுவத்திடம் 2009ம் ஆண்டு மே மாதம் சரணடைந்தார். அவரை இலங்கை இராணுவம் விசாரணை செய்யும் வீடியோக் காட்சிகள் ஏற்கனவே வெளியாகியிருந்தது.
இந் நிலையில், புலிகளின் மூத்த தளபதியான கேணல் ரமேஷ் தலையில் அடித்துக் கொல்லப்பட்டு தீயிட்டு கொளுத்தி உள்ளனர் எற்பதற்கு தற்போது வெளியாகியிருக்கும் புகைப்பட ஆதாரங்கள் வெளிச்சம் போட்டுக்காட்டுகின்றது.
கடந்த 2009 ஆம் ஆண்டு மே 22 ஆம் நாள் சிறீலங்கா இராணுவத்தினர் அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளில் கொக்கட்டிச்சோலை அரசடித்தீவை பிறப்பிடமாகக் கொண்ட துரைராஜசிங்கம் தம்பிராஜா (18.08.1964) என ரமேசின் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
மூன்று பிள்ளைகளின் தந்தையான ரமேஸ் விடுதலைப்புலிகள் அமைப்பின் சிறப்புத் தளபதியாக பணியாற்றியிருந்தார். அவர் 1986 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்திருந்தார்.
ரமேசிடம் விசாரணைகளை மேற்கொண்ட சிறீலங்கா படையினரின் அடையாளங்கள் காணொளியில் தெளிவாக காணப்படுகின்றன.
Tuesday, March 20, 2012
Subscribe to:
Comments (Atom)
